சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

0
142

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

சென்னையில் டியுஷனுக்கு வந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கணவனைக் காப்பாற்ற நினைத்த மனைவியும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடியில் உள்ளது அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ்(33) மற்றும் விஜயலட்சுமி(32). நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வருகிறார். விஜயலட்சுமி ஆசிரியையாக இருப்பதால் மாலை நேரங்களில் தனது வீட்டில் குழந்தைகளுக்கு டியுஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். அவரது டியுஷனுக்கு நிறைய சிறுமிகள் மற்றும் குழந்தைகள் வந்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமி ஒருவரிடம் விஜயலட்சுமியின் கணவர் நரேஷ் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டு அலற அவரை விட்டுள்ளார். சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு செல்ல அவரை அந்த கோலத்தில் பார்த்த பெற்றோர் பதறியுள்ளனர். அதே டியுஷனில் படிக்கும் சிறுமியின் சகோதரர் நடந்ததைப் பற்றி பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிஸார் நரேஷ் வீட்டுக்குச் சென்று பார்க்க கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் அவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களின் செல்போன் சிக்னல்கள் மூலம் பூந்தமல்லியில் உறவினர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்த. அவர்களைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !
Next articleதொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் செய்த சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !