அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! மகிழ்ச்சியின் உச்சத்தில் பெண்கள்!

0
199

ஆபரண தங்கத்தின் விலை 1 சவரனுக்கு 440 குறைந்து 37,560க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை மாதம் முதல் நாள் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து தங்கம் விலையும், அதிரடியாக அதிகரித்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 6 தேதி 38000-க்கு விற்பனையான விலை அடுத்த நாள் 440 ரூபாய் குறைந்து 37,560 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல கிராம் ஒன்றுக்கு 55 ரூபாய் குறைந்து 4,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதேபோல வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 58 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 58,000 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை சரிந்து 6 வாரங்களுக்கு முந்தைய விலைக்கு விற்கப்படுவதால், பெண்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

Previous articleஆதார் துறையில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு!
Next articleமீண்டும் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தருகிறார் பன்னீர்செல்வம்? பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட மனு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here