பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

Photo of author

By Vijay

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

Vijay

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை தடுக்க விதிகள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் ,பேனர்கள் வைத்தபோது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய வழக்கு மற்றும் பேனர்கள் வைத்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.