வெறும் ஆறே மணி நேரத்தில்.. 52,000 கோடி இழந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்.!!

0
142

நேற்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவை சுமார் ஆறு மணி நேரம் முடங்கியதால் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவைகள் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. அதன் காரணமாக, கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.சுமார் 6 மணி நேர முயற்சிக்குப் பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 4 மணி முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. எனினும் இந்த சில மணி நேர பாதிப்பு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கிற்கு அதிக அளவில் பாதித்துள்ளது.

அமெரிக்க பங்குசந்தைகளில் பேஸ்புக் பங்குகள் மதிப்பு சரிந்ததால் மார்க் ஜுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்து, 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், பேஸ்புக்கின் விளம்பர வருவாயில் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 7 கோடி ரூபாய் வீதம் ஆறு மணி நேரத்திற்கு 42 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.