‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை வெளியிட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
கந்த சஷ்டி கவச பாடலை வெளியிட கூடாது என்று சிம்போனி நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கர்நாடக இசைக் கலைஞரான நடிகை ஷோபனா சிறுவயதில் இருந்தே ஆன்மீக பாடல்களை பாடுவதில் திறமையானவர். கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல சிம்போனி நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில் கந்த சஷ்டி கவசம் மற்றும் டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற இரண்டு பாடல்களை பாடி ஆல்பமாக இணையத்தில் வெளியிடப்பட்டது.
இப்பாடல்கள் யுடியூப் போன்ற இணையத்தில் 5 கோடி நபர்களுக்கும் மேல் தாண்டி பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய எவ்வித அனுமதியும் இல்லாமல் இணையத்தின் மூலம் தன்னுடைய பாடல்களை பதிவேற்றி வருமானம் பார்க்கும் சிம்பொனி நிறுவனத்தின் மீது நடிகை ஷோபனா வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது.
நடிகை ஷோபனா 13 வயதில் இருந்தபோது சிம்பொனி நிறுவனம் அவரிடம் ஒப்பந்தம் போட்டது சட்ட ரீதியாக செல்லாது என்று நடிகையில் தரப்பு வக்கீல் வாதாடினார்.
மேலும், நடிகையின் அனுமதி இல்லாமல் முகநூலில் இருந்து புகைப்படங்களை எடுத்து ஆல்பங்களுக்காக பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என்று வாதிட்டார். பின்னர் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு பிறகு நடிகை ஷோபனா பாடிய இரண்டு ஆல்பங்களையும் இணையத்தில் வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தனது உரிமை இல்லாமல் பாடியதால் இளையராஜாவுக்கும் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.