தீபாவளிக்கு இறைச்சிக் கடைகள் மூடல்- பொதுமக்கள் அதிர்ச்சி.!!

0
167

வரும் நவம்பர் 4-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், அதே நாளில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும்’.

அதேபோல், ஆடு, மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களிலும் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலர்களும் தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்பட்டுள்ளதாஎன்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த அறிவிப்பால் தீபாவளி பண்டிகை கொண்டாடும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதேசிய விருதை வாங்க மாட்டேன்-விஜய் சேதுபதி.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!
Next articleமுன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த பூனம்பாஜ்வா.! கிறங்கிப் போன ரசிகர்கள்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here