இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்!

Photo of author

By CineDesk

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்!

முகக்கவசம்  போடவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் 2 ஆம் அலை கொரோனா வைரஸ் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட  மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தை கடந்து செல்கிறது. நிலைமையின் தீவிரம் அறியாத பொதுமக்கள் மிகவும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக தங்களின் அன்றாட வாழ்வில் ஆபத்தை சேர்த்து வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பை கட்டுபடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில்  கடந்த 10 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து கடைகளும் 10 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும் என்றும் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வைதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக்கத்தில் கடுமையான கட்டுபாடுகள் விதித்துள்ள நில்லையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 2.52 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ந்தது. மாஸ்க் அணியாத நபர்களிடம் 2௦௦ ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இதை தொடர்ந்து இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 7000 காவலர்கள்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.