மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் முதல்வர்!

0
115

தமிழகத்தை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தொற்றின் இந்த அதிகரிப்பானது பொதுமக்களின் அலட்சியம் காரணமாகவே உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தொற்றின் அதிகரிப்பை குறைப்பதற்காக முதல்வர் இ.பி.எஸ் தலைமையில் மருத்துவ வல்லுனர்களின் கலந்தாய்வுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன செய்திக்குறிப்பு ஒன்றில்,

நேற்று நடந்த மருத்துவ வல்லுநர் குழு உடன் கலந்தாலோசித்த பின்னர் நோய்த்தொற்றின் வீதத்தை குறைப்பதற்காக சில உத்தரவுகள் மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது பரிசோதனைகளை அதிகமாக செய்து ஒரு நாளைக்கு நோய்த்தொற்றின் விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் வருமாறு செய்யவேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தொற்றின் மதம் ஐந்துசால் வைத்திருக்கும் கீழாகவே இருக்கிறது ஆனாலும் சோதனைகளை ஒரு நாளைக்கு 90,000திற்கும் குறையாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகமாகவும் இருக்கவேண்டும்.பரிசோதனைகளின் முடிவுகளை பொறுத்தவரையில் 24 மணிநேரத்தில் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதிலும் தேவையான அளவிற்கு முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் இருப்பவர்க்ச்ளை கண்டுப்பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இதுவரையில் எட்டு லட்சத்து 92 ஆயிரத்து682முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் இருக்கின்ற 14 லட்சத்து 47 ஆயிரத்து 69 பெயரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 10ஆம் தேதி 1309 பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு பொதுசுகாதாரசட்டம் 1939ந்படி இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம் உள்ளாட்சி காவல் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 10ம்ந்தேதி வரையில் 16,37,245விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு17,92,56700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.தகுதி உள்ள எல்லோரும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையம் ,அரசு மருத்துவமனை போன்றவற்றில் இலவசமாக ஊசி போடப்படும்.மத்திய அரசின் விதிமுறைகள் படி கடந்த 11ந்தேதி முதல் நாற்பத்தி ஐந்து வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் முன்களப்பணியாளர்கள்,சுகாதார ஊழியர்கள் என மொத்தம் 37 லட்சத்து 80 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அதோடு 11ஆம் தேதி வரையில் 54,85,720 தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.ஆகவே அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.