நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

Photo of author

By Rupa

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

ஓரிரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்த  சகோதரர்கள் நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதுமட்டுமின்றி வருமானவரித் துறையினரை அவர்களின் வேலையை செய்யவிடாமல் திமுக நிர்வாகிகள், அவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து நேற்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் நேற்று காலை முதல்  சோதனை செய்தனர்.மேற்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜி அறையில் நடைபெற்ற சோதனையில் ஏதேனும் முக்கிய ஆவணங்களில் அமைச்சர்கள் பெயர்கள் அடிபட்டால் தொடர்ந்து அவர்களின் இடத்திலும் ரெய்டு நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அதை வைத்து பார்க்கையில் இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் என பலர் சிக்குவர்.

அது மட்டுமின்றி அரசின் தலைமைச் செயலகத்தில் இவ்வாறு சோதனை செய்வது ஆளும் கட்சிக்கு சற்று சரிவையே ஏற்படுத்தும். பெரும்பாலும் அரசின் தலைமை செயலகத்தில் சோதனை நடத்துவது என்பது குறைவுதான். அந்தவகையில் இந்த சோதனை இவர்களுக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும்.

மேலும் தலைமைச் செயலகத்தை சுற்றி துணை ராணுவ படையினரை பாதுகாப்பிற்காக குவித்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு செந்தில் பாலாஜி விசாரிக்க அமலாக்க துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அவ்வாறு அவரை அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சை முடிந்ததும் விசாரணை செய்ய அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றுள்ளனர்.