இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!!

0
193
#image_title

இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!!

பான் கார்டு ஆனது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது அடையாள அட்டையாக இருப்பது நமக்கு ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தான்.

இதனை அடுத்து மத்திய அரசானது மூன்றாவதாக பான் கார்டையும் இதில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. எனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

இதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் பான் கார்டு குறித்து பல விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் இனி இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் பான் கார்டு ஆனது தற்பொழுது பணப் பரிவர்த்தனைக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. அதாவது கடன் வாங்குவது முதல் வருமான வரி செலுத்துவது வரை நமது அனைத்து பண பரிவர்த்தனை செயல்களுக்கு பான் கார்டு மிகவும் அவசியம்.

அந்த வகையில் இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் பணப்பரிவர்த்தனை மற்றும் இதர தரவுகள் என அனைத்தும் இரண்டு பான் கார்டிலும் பதிவு செய்யப்படும்.

எனவே இதனை தடுக்க தற்பொழுது அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. ஒருவருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே இன்று வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் இதை மீறுவோருக்கு வருமான வரி சட்டம் கீழ் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதமாக பத்தாயிரம் வரை வசூல் செய்யப்படும் எனக் கூறியுள்ளனர். எனவே இரு பான் கார்டு உள்ளவர்கள் ஒன்றை அரசிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை மட்டும் உபயோகிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.