உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை!    

Photo of author

By Rupa

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை!    

Rupa

Chicken rice brought to life! The life of a young man who is miserable!

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை!

தற்பொழுது வரும் துரித உணவுகளால் பலரது உடலும் அதிகளவு பாதிப்பை சந்திக்கிறது. சமீப காலமாக பிரியாணி மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு இளம் வயதினரே உயிர் இழக்கும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்தவர்தான் மகாவிஷ்ணு.

இவருடைய நண்பரான ராம் என்பவரின் பிறந்த நாளை கொண்டாட மகாவிஷ்ணு சென்றுள்ளார்.அப்பொழுது அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தி உள்ளனர். மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பின்பு அவருடைய நண்பர் தங்கி இருக்கும் அறையிலேயே மகாவிஷ்ணு இரவு தங்கி கொண்டார். காலை பல மணி நேரம் ஆகியும், அனைவரும் எழுந்த நிலையில் மகாவிஷ்ணு மட்டும் எழவில்லை.

பலரும் அவரைத் தட்டி எழுப்பி பார்த்து உள்ளனர். பின்பு அவர் மூச்சு இன்றி இருப்பதை அறிந்த அவர்களது நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மகாவிஷ்ணுவை பரிசோதனை செய்த மருத்துவ,ர் இவர் பல மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்பு மகாவிஷ்ணு உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றாக பேசிக்கொண்டு இருந்தவர் இரவு நேரத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு காலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.