தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையிலிருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது குறித்து பேசவிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக இன்றிரவு 9.30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி விரைகிறார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து நாளைய தினம் அவர் வாழ்த்து தெரிவிக்கிறார்.
இதனையடுத்து மாலை 4.30 மணியாளவில் பிறந்தநாள் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் நன்றி தெரிவிக்கிறார். நோய் தொற்று பாதிப்பு உண்டானதால் முதலமைச்சர் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சென்று அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கூட செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொண்டார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்கவுள்ளார்.
அதோடு தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகள் தொடர்பாகவும், ஆளுநர் வசம் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழக அரசின் மசோதாக்களுக்கு மிக விரைவாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.