நோய் தொற்று சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

0
89

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வருடத்திற்கு 2.5 லட்சம் அதிகமான வருமானம் பெற்றால் நிச்சயமாக அவர்கள் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். வீட்டுக் கடன், பி, பி, எப், எல்ஐசி, குழந்தைகளின் கல்விச் செலவு உள்ளிட்டவற்றிற்கு வருமான வரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் சென்ற வருடம் நோய்த்தொற்று மக்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியபோது ஊழியர்களின் வசதிகளுக்காக பல்வேறு சலுகைகளை வருமான வரித்துறை அறிவித்தது. அதில் வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக சென்ற வருடங்களில் நோய் தொற்று காரணமாக, பலர் பாதிக்கப்பட்டதோடு பலர் உயிரிழந்தார்கள். ஆகவே உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பணத்தைப் பெற்று பலர் சிகிச்சை பெற்றார்கள். அதோடு நோய் தொற்றினால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் நிதியுதவியும் வழங்கினர்.

ஆனாலும் இதுபோன்றுநிதியுதவி மற்றும் நோய் தொற்று சிகிச்சைக்காக பெற்ற பணங்கள் எதுவும், வருமான வரி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது அதற்கு விலக்கு வழங்கப்படுகிறது என மத்திய அரசு கூறியிருந்தது.

அதன் அடிப்படையில் 2021-2022 உள்ளிட்ட நிதியாண்டிலும், நோய் தொற்று சிகிச்சைக்காக பெறும் அனைத்து விதமான பணங்களுக்கும் விலக்கு வழங்கப்படவுள்ளது. இது குறித்து அண்மையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய நிபந்தனைகள் மற்றும் நோய் தொற்று சிகிச்சைக்கான செலவுகளுக்கு விலக்கு பெறுவதற்கான படிவத்தை அறிவித்துள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள்? எப்படி சமர்ப்பிக்க வேண்டும்? என இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நோய் தொற்று சிகிச்சைக்காக நிறுவனம் அல்லது உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்திற்கு வரி விலக்கு பெறுவதற்கு முதலில் இது குறித்து அனைத்து ஆவணங்களையும், ஒரு படிவத்தையும், வருமானவரித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல வருமானவரி துறையின் புதிய அறிவிப்பினடிப்படையில் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது என்ற மருத்துவ அறிக்கை அல்லது மருத்துவமனையிலிருக்கின்ற மருத்துவர்களால் நோய் தொற்று சிகிச்சை வழங்குகிறோம் என்ற அறிக்கையை பெற்று அதனை நிறுவன அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

நோய் தொற்று சிகிச்சைக்கு இதுவரையில் செலவாகி இருக்கின்ற மொத்த பணத்திற்கான ஆவணங்கள் நிச்சயமாக இதில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது.

இத்துடன் உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த தொகை, யாரிடமிருந்து பணம் பெறப்பட்டதோ அவர்களுடைய பெயர், முகவரி, பான் எண் மற்றும் எந்த நிதியாண்டில் தொகை வழங்கப்பட்டது என்ற அனைத்து விவரங்களையும் வருமானவரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் நோய் தொற்று காரணமாக, உயிரிழந்த ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் பெறப்படும் நிதியுதவிகளுக்கு வரி விலக்கு கோருவதற்கும், இந்த நடைமுறை பொருந்தும் என சொல்லப்படுகிறது.

அதோடு மருத்துவ பயிற்சி ஆசிரியர் அல்லது அரசு சிவில் பதிவு அலுவலகத்தால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கை அல்லது இறப்புச் சான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சான்றிதழில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக தான் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார் என்ற விவரம் நிச்சயமாக இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும், வருமான வரித்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.