ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!!

Photo of author

By Sakthi

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!!

Sakthi

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!!

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்காக வழங்கவிருக்கும் உலகக் கோப்பையுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் புகைப்படம் எடுத்து அதை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய பத்து அணிகள் பங்கேற்கவுள்ளது.

அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வெற்றி பெறும் அணிக்கு வெற்றிப் பரிசாக உலகக் கோப்பை வழங்கப்படும். அந்த உலகக் கோப்பை உலகம் முழுவதும் சுற்றி வந்தது.

இதையடுத்து இலங்கையில் இருந்த உலகக் கோப்பை விமானம் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை வந்த உலகக் கோப்பைக்கு சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் அரங்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜு, உதவி செயலாளர் ஆர்.என் பாபா, உதவித் தலைவர் ஆடம் சேட், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உலகக் கோப்பைக்கு வரவேற்பு தரப்பட்டது.

உலகக் கோப்பை இன்றும்(செப்டம்பர்16), நாளையும்(செப்டம்பர்17) சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்களின் பார்வைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்நிலையில் சென்னையில் வைக்கப்பட்டுள்ள உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து “இந்த முறை உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.