முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

Photo of author

By CineDesk

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

CineDesk

மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி https://www.dailythanthi.com/News/India/bjp-alliance-will-win-330-seats-in-lok-sabha-elections-edappadi-palaniswami-interview-in-delhi-1011179

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு முற்றிய நிலைமையில் கூட இந்தியாவில் அதை குறைக்க மோடி பெரிதும் பணியாற்றினார்.

இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்று பாரபட்சம் பார்க்காமல், அனைத்து கட்சிகளும் சம நிலையில் உள்ளது. மேலும், இந்த பாஜக கூட்டணியில் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்.

ஆனால் திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்து அடிமை வாழ்வை வாழ்ந்து வருகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் எப்போதுமே தலைமை வகித்து வருகிறது.

எனவே, அடுத்த ஆண்டு வரக்கூடிய இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியானது நிச்சயமாக 330 இடங்களில் வெற்றி பெரும் என்று கூறி உள்ளார்.

மேலும், இந்தியாவில் ஊழல் செய்யக்கூடிய ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். அந்த வகையில், அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு முதல்வருக்கு சிறிதும் தகுதி அல்ல.

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிகமான உறுப்பினர்களை கொண்டிருக்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்.

எனவே, நாங்கள் சிறப்பான ஆட்சியை அமைத்து தருவோம் என்று மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாக செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.

இவ்வாறு இவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை பற்றி பெருமையாக பேசி வந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையில் தற்போது உரசல்கள் ஏற்பட்டு வருகிறது.

அதிமுக துணை இல்லாமல் எதுவுமே செல்லுபடி ஆகாது. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை தான் வைத்ததுதான் சட்டம் என்று இருந்து வருகிறார்.

மேலும், பாஜக தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தில் கண்டிப்பாக குறைந்தது நான்கு தொகுதிகளாவது வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலங்களை பொறுத்த வரை எப்போதுமே அங்கு அதிமுக ஆட்சி தான். எனவே, கொங்கு மண்டலங்களை பாஜக விற்கு தருவதற்கு அதிமுக துளியும் விரும்பவில்லை.

அதிமுக வலிமை பெற்று இருக்கும் பகுதிகளை பாஜக விற்கு தந்துவிட்டு என்ன செய்வது என்று எடப்பாடி கொந்தளித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.