புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

Photo of author

By Parthipan K

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

Parthipan K

Updated on:

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில்  சென்னையில் பல்வேறு –  திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை  தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் நீர்வழிதடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும்; சாலைகள் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைப் போக்கும் வகையில் நீர் வழித்தடம் பல்வேறு பகுதி சாலைகளில் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் பல சாலைகளில் பாதாளச் சாக்கடைகள் சரிவர மூடாமல திறந்த நிலையில் இருப்பதாகவும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  இதனை சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் படிபடியாக சரிசெய்து வருவதாக கூறப்படுகிறது. சாலையில் கழிவுநீர் தேங்காமலும், மழைநீர் தேங்காமலும்  இருக்க சிறந்த மற்றும் மூடிய நீர் வழித்தடம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நீர்வளத்துறையின் சார்பில் 91.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை – மாதவரம் மற்றும் அயனாவரம் வட்டங்களில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை  தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கண்காணிப்பில் இது செயல்பட்டு வருகிறது.