அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா?

0
143

அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல் வரிகளால் மக்களை கவர்ந்திழுத்தவர் கவிஞர் வாலி. இவர் நவரச பாடல்களை எழுதியுள்ளார். காதல், சோகம், காமம், குத்து என பலதரப்பட்ட பாடல் வரிகளை சூழ்நிலைக்கு ஏற்றார்போல எழுதி கொடுத்துள்ளார்.

1978ம் ஆண்டு முத்துராமன், லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அச்சாணி’. இப்படத்திற்கு வாலி பாடல்களை எழுத, இளையராஜா இசையமைத்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்’ என்ற பாடல் இன்று வரைக்கும் அனைத்து மாதா கோவில்களிலும் கேட்க முடியும். அந்த அளவிற்கு இப்பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இந்தப் பாடலை பாடியவர் ஜானகி அம்மா.

இந்தப் பாடல் இசையமைத்தபோது, ஸ்டூடியோவில் பாட முடியாமல் பாடகி ஜானகி அழுத செய்த தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயேசுவை பெறாமல் பெற்றதாயாக மேரி மாதா இருந்தது போல இப்படத்தின் கதாநாயகிக்கு காட்சிகள் அமைக்கப்பட்டன. அந்த சூழலுக்கு ஏற்றவாறு வாலி பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

‘மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்’ என்ற பாடலை பிரசாத் ஸ்டுடியோ இளையராஜா இசையமைக்க ஏற்பாடு செய்தார். இந்தப் பாடலை பாடிக்கொண்டிருந்த ஜானகி ‘பிள்ளை பெறாத பெண்மை தாயானது.. அன்னை இல்லாத மகனை தாலாட்டுது’ என்ற வரி பாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று நிறுத்திவிட்டாராம்.

ஸ்டூடியோவில் இருந்த அனைவரும் ஜானகி அம்மாவை பார்த்துள்ளனர். உடனே ராஜா, ஜானகியிடம் சென்று ஏன் என்னாச்சு என்று கேட்டுள்ளார். அதற்கு ஜானகி, என்னால் இந்த பாடலை பாட முடியவில்லை. இப்பாடலின் வரிகள் என்னை ஏதோ செய்கிறது என்று கூறி அழுதுள்ளார். உடனே ராஜா அவரை சமாதானப்படுத்தி இப்பாடலை பாட வைத்துள்ளார்.

இப்பாடலை கேட்ட ஆர்.சுந்தர்ராஜன், ராஜாவிடம் இதேபோல் எனக்கு இப்பாடலை உருவாக்கி தர வேண்டும் கேட்க, அப்படி உருவான பாடல்தான் ‘மணி ஓசை கேட்டு எழுந்து’ என்ற பாடல்.  இப்பாடலையும் ஜானகியே பாடியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Gayathri