குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா?
தமிழத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். மேலும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தவறானது என்று தமிழக ஆளுநர் கூறியிருந்தார்.
மேலும் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடைபெற்றதாகவும், அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளதாவது. சிறுமிகளின் திருமண விவகாரத்தில், அவர்களின் சட்ட ஆலோசகரின் ஒப்புதல் பேரில் சிறுமிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். நான்கு பேரில் இருவர் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தார்கள் என்பதில் சிறுதும் உண்மையில்லை என தெரிவித்தார்.
மேலும் இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று சிதம்பரம் கோவிலுக்கு வந்து அங்குள்ள தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டார். சிறுமிகளிடம் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என கேட்டறிந்தார். இந்த விசாரணையின் முடிவில் இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கூறினாலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது உண்மை என தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில் 2 அல்லது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.