மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!!

0
161
Officials sealed liquor shops without locks!! Shocked public!!
Officials sealed liquor shops without locks!! Shocked public!!

மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். அதுபோல் தஞ்சை மாவட்டத்திலும் கள்ளச்சந்தையில் மாதுபானம் வாங்கி அருந்திய இருவர் பலியாகினர். அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உரிமம் இல்லாத மதுபான கடைகள் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட மதுபான கடைகளில் போலீசாரும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் சோதனை மேற்கொண்டனர். அதில் 3 கடைகள் உரிமம் இன்றி செயல்பட்டதால் 3 கடைகளுக்கும் சீல் வைத்தனர். அதிகாரிகள் அதில் இரண்டு கடைகளுக்கு பூட்டு போடாமல், கதவின் தாழ்பாள் மீது வெறும் துணியை சுற்றி சீல் வைத்து சென்றுள்ளனர்.

கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடைபெற்ற இந்த கண்துடைப்பு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி மதுபானங்கள் குடித்து உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் இது போன்ற சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது. மதுபான கடைகளுக்கு சீல் வைக்கிறோம் என கூறி, போலி மது விற்பவர்களுக்கு ஆதரவாக நடந்த இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என பொது மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

author avatar
CineDesk