திருப்பூர்: 8 வயது சிறுவனை கொலை செய்து புதரில் வீசிய கொடூர சம்பவம்! இதற்காகவா இப்படி.?

Photo of author

By Jayachandiran

திருப்பூர்: 8 வயது சிறுவனை கொலை செய்து புதரில் வீசிய கொடூர சம்பவம்! இதற்காகவா இப்படி.?

Jayachandiran

Updated on:

திருப்பூர் மாவட்டம் சொட்ட கவுண்டம்பாளையத்தைச் சேரந்த தங்கராஜ் – சுமதி தம்பதி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு பவனேஷ் உட்பட இரண்டு மகன்களும் அருகேயுள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் குழந்தைகள் இருவரும் வழக்கம்போல வீட்டில் இருந்தனர். மாலை நேரம் பெற்றோர்கள் வீடு திரும்பிய நேரத்திற்கு பிறகு பவனேஷை மட்டும் காணவில்லை. இதனால் அவர்களுக்கு பதட்டம் ஏற்பட்டு அக்கம்பக்கம் தேடி அலைந்து பின்னர் ஊத்துக்குளி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் நேற்று காலை புத்தூர் பள்ளப்பாளையம் மயானம் அருகேயுள்ள புதரில் சிறுவனின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து அஜித் என்கிற இளைஞர் கைது செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதுசம்பந்தமாக அஜித் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியளித்தது.

புத்தூர் பள்ளப்பாளையம் அருகேயுள்ள ஒரு குளத்தில் நானும் எனது காதலியும் மிக நெருக்கமாக இருந்ததை சிறுவன் பவனேஷ் பார்த்துவிட்டார். எனது காதலியின் வீடும் சிறுவனின் அருகருகே உள்ளதால், இந்த உண்மையை அவன் வெளியில் சொல்லக்கூடும் என்று பயந்து அவனை கொல்ல திட்டமிட்டோம்.

அங்கிருந்த பீர் பாட்டலை உடைத்து பவனேஷை குத்திக் கொன்றதாக அஜித் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து காதலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காதலி சிறுமி என்பதால் கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். காதல் லீலைக்காக 8 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.