பெற்ற குழந்தை என பாராமல் ஒன்ரறை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சைக்கோ தந்தை கைது..!

0
184

ஒன்ரறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என வயது வித்யாசமின்றி பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகிறனர். அதிலும் வீட்டில் உள்ளவர்களாலேயே இந்த கொடுமை நடப்பது கொடுமையின் உச்சம். அப்படி ஒரு சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தி ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் கஞ்சா அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். தினமும் வேலை முடிந்து விட்டு கஞ்சா அடித்து வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவரது ஒன்ரறை வயது மகளின் அருகே படுத்துள்ளார்.

குழந்தை சிறிது நேரத்திலேயே அழ ஆரம்பித்ததால் அவரின் தாய் பார்த்த போது கணவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை மீட்ட அவர் திருச்சி அரசு மருத்துவமனையினுக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தகாயம் இருப்பதை கண்டறிந்தனர்.

உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இந்த தகவலை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தந்தை குழந்தையின் தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Previous articleவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!.
Next articleபாலிவுட்டில் என்னை உருவக்கேலி செய்தார்கள் – மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா !