விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!.

0
83

ஏற்கனவே சீனாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும்.

இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி புதிய நோட் நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது, ஏற்கனவே இந்த சாதனத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆனால் இந்த சாதனத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் நிறுவனம் தனது வெளியீடு குறித்து ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளது, இதனை வைத்து ஒப்பிட்டு பார்க்கையில் ஐபோன் 13 ப்ரோ மாடல்களை ஒத்திருப்பது போன்று தெரிகிறது. ஏற்கனவே சீனாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும்.

ரெட்மி நோட் 12 4ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற நான்கு விதமான கட்டமைப்புகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலைகள் முறையே ரூ. 13,600, ரூ. 14,60, ரூ. 17,000, ரூ. 19,300 ஆகிய விலைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம்+ 256ஜிபி ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது. நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் ஆனது கிட்ட்டத்தட்ட ரூ. 25,000 மற்றும் ரூ. 27,300 ஆகிய விலைகளில் கிடைக்கும். ரெட்மி நோட் 12 ப்ரோ 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய கட்டமைப்புகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலைகள் முறையே ரூ. 20,400, ரூ. 22,700, ரூ. 24,900 ஆகும்.

author avatar
Savitha