தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!

Photo of author

By Jayachandiran

தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் மகன் ஆண்ட்ரூ என்கிற சிறுவன் அங்கிருந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் மிகவும் சுட்டியாக விளையாடுவதை வழக்கமாக கொண்ட சிறுவன் வழக்கம் போல் தனது அம்மாவின் சேலையை ஊஞ்சல் கட்டி விளையாட நினைத்து, தனக்கு தெரிந்த வகையில் சேலையை முடிச்சு போட்டு மேலே மாட்டியுள்ளார்.

குழுந்தையை போல் ஊஞ்சல் சேலையில் படுத்து விளையாடிய போது சரிவர போடப்படாத சேலையின் முடிச்சி சிறுவனின் கழுத்து இறுக்கமாக பற்றிக் கொண்டது. இந்நிலையில் சிறுவன் கத்த முடியாமலும், அதில் இருந்து மீளமுடியாமல் துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்ததும் சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அருகில் இருந்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யாரும் எதிர்பாராத சிறுவனின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.