குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!!
குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஆனால், குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு ஒரு சூப்பர் டிஷ் உள்ளது. குழந்தைகளுக்காக சுவைமிகுந்த முட்டை மசாலா எவ்வாறு செய்வது ?என்பதை பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை -5
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது -ஒரு ஸ்பூன்
வெங்காயம் -1
கருவேப்பிலை -சிறிதளவு
வெங்காயத்தாள் -சிறிதளவு
கடுகு -ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -ஒரு ஸ்பூன்
சீரகம் -ஒரு ஸ்பூன்
உப்பு -ருசிக்கு ஏற்றவாறு
எண்ணெய் -2 ஸ்பூன்
செய்முறை :
முட்டையை வேக வைத்து பின் அதனை பாதியாக வெட்ட வேண்டும். அதன் பின் தக்காளி மற்றும் கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் சீரகம் போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
இதனை அடுத்து தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி இறக்கினால் சுவைமிகுந்த முட்டை மசாலா தயார் ஆகிவிடும். இதனை ஒருமுறை குழந்தைகள் சாப்பிட்டால் பின் சாப்பிட மாட்டேன் என்று கூறவே மாட்டார்கள்.