கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடை மிளகாய் எண்ணெய்!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?

0
115
#image_title

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடை மிளகாய் எண்ணெய்!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?

கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்யும் குடை மிளகாய் எண்ணெயை எவ்வாறு தயாரிப்பது என்ன பொருட்கள் தேவை எப்படி பயன்படுத்துவது என்பது இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

குடை மிளகாய் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் முன்பு ஒரு பதிவில் நாம் தெரிந்து கொண்டோம். இந்த பதிவில் குடை மிளகாய் தலை முடிக்கு என்ன பயன் அளிக்காததால் என்பது பற்றியும் குடை மிளகாய் எண்ணெய் தயார் செய்வது பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

குடை மிளகாய் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்…

* குடை மிளகாய்
* ஆலிவ் எண்ணெய்

தயார் செய்யும் முறை…

பாதி அளவு குடை மிளகாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய பாட்டிலில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த குடை மிளகாய் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் எண்ணெயை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை அப்படியே மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

மூன்று நாட்கள் ஊற வைக்க வேண்டும். மூன்று நாட்கள் ஊற வைக்கும் பொழுது குடை மிளகாய் உள்ள சத்துக்கள் ஆலிவ் எண்ணெயில் இறங்கி இருக்கும்.

மூன்று நாட்கள் கழிந்த பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை தலையால் தேய்க்கலாம். இதை தவிர்த்து பயன்படுத்தி வரும்பொழுது முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

குடை மிளகாயின் நன்மைகள்…

இந்த குடை மிளகாய் எண்ணெயை பயன்படுத்தும் பொழுது நமது தலை முடியின் வேர் கால்கள் வலிமை பெறுகின்றது. குடை மிளகாய் எண்ணெயை பயன்படுத்தும் பொழுது பொடுகுத் தில்லை என்பது முற்றிலும் குணமாகும். குடை மிளகாய் எண்ணெய் நமது மண்டை ஓட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றது. மேலும் மண்டை ஓட்டிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்துக் கொடுக்கின்றது.

Previous articleபெண்களே உங்களின் முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!? தேங்காய் பால் ஓட்ஸ் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்துங்க!!!
Next articleவங்கி வேலை வேண்டுமா? “பேங்க் ஆப் இந்தியா” வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.20000/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!