நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

0
193

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

கொரோனா ஆபத்தினால் சில மாதங்களாக தடைபட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து மீண்டு வழக்கம்போல களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இதனால் சீன மார்க்கெட்டுகளில் நாய், பாம்பு, தேள் மேலும் பல்வேறு இறைச்சி சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் மூலம் உலக நாடுகளுக்கும் பரவி பலாயிரம் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இத்தாலியில் 10,000 மேற்பட்டோர் இறக்க நேரிட்டது. அமெரிக்காவில் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் தினம் கொரோனா தொற்று பாதிப்புள்ள புதிய நோயாளிகள் உருவாகிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா தொற்று முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில், அங்குள்ள உணவுப் பொருள் சந்தைகள் மீண்டும் இயல்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. சீன மக்களின் உணவுப் பொருட்களை பார்த்தாலே பலருக்கு தலைசுற்ற ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு அவர்களின் உணவுப்பட்டியல் தயார் செய்யப்படும். ஆட்டின் விதை, வறுத்த தேள், பாம்பு, நாய், பல்லி, ஆக்டோபஸ், எலி, புழுக்கள், தவளை உள்ளிட்ட உணவுகளை மீண்டும் சந்தையில் விற்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த உணவுப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் திரண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் சந்தையில் விற்கும் பொருட்களை புகைப்படம் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவில் இருந்து மீண்ட சில நாட்களிலேயே பாரம்பரிய உணவுமுறைக்கு சீனர்கள் திரும்பியுள்ளது பலரிடையே வெறுப்பை உண்டாக்கியுள்ளது.

Previous articleகாஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!!
Next articleமூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?