இந்தியா மீது கடுமையான விமர்சனத்தை கூறிவரும் சீனா

Photo of author

By Parthipan K

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சமீப காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. சீன லடாக் பகுதியில்  கலவரத்தை ஏற்படுத்தியதால் இந்திய பதிலடி கொடுக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், பதற்றம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்தயா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது.  அதில் இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறியுள்ளது.