சீன அதிபர் ஜின்பிங்கின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

Photo of author

By Parthipan K

சீன அதிபர் ஜின்பிங்கின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

Parthipan K

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாதம் பாகிஸ்தான்  செல்லவிருந்தார். ஆனால்,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் பயணத்தின் மறு தேதியை உறுதி செய்ய இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை வலுத்து வரும் நிலையில் சீன அதிபரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.