வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கிளம்பிய வதந்தி… பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி!

Photo of author

By Vinoth

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கிளம்பிய வதந்தி… பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி!

பிரபல பாடகி சின்மயிக்கு சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைக்கு தாயானார்.

பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். மேலும் சமந்தா, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீ டு பிரச்சனை பூதாகாரமாக வெளியான போது பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது குற்றம் சாட்டி பரபரப்பைக் கிளப்பினார். அதன் பின்னர் பலருடைய மீ டு அனுபவங்களையும் அவர் வெளியிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. இப்போது  சின்மயிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் இப்போது நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்துள்ள நிலையில் சின்மயியும் வாடகைத் தாய் மூலமாகதான் குழந்தை பெற்றுக்கொண்டார் என்று வதந்திகள் கிளம்பவே, குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.