CHOCOLATE BENEFITS: இரத்த சர்க்கரை முதல் புற்றுநோய் வரை.. சாக்லேட் சாப்பிட்டே க்யூர் பண்ணிடலாம்!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாக்லேட் என்றால் அலாதி பிரியம்.சிலருக்கு தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் சொத்தை ஆகிவிடும்.வயிற்றில் புழுக்கள் உற்பத்தியாகி விடும் என்று சிலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் உண்மையில் சாக்லேட் உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.சாக்லேட்டில் பல வகைகள் இருக்கிறது.இதில் டார்க் சாக்லேட் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வரை வழங்கும்.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
1)பருவமடைந்த பெண்கள் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும்.
2)டார்க் சாக்லேட்டில் இருக்கின்ற ஃப்ளேவோனாய்டுகள் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் இருக்கின்ற செல்களை சீராக செய்லபட வைக்கிறது.
3)தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆற்றல் அதிகரிக்கும்.இதனால் நமது அறிவுத்திறன் மேம்படும்.
4)இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த அழுத்தத்தை குறைக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.இரத்த அழுத்தம் குறைந்தால் இதயத்தின் செயல்பாடு மேம்படும்.
5)டார்க் சாக்லேட்டில் இருக்கின்ற க்ளைசீமிக் இன்டெக்ஸ் இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
6)இதில் இருக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.