பெண்களுடன் ஆபாசபடம் தலைமறைவான பாதிரியார் கைது

Photo of author

By Vijay

பெண்களுடன் ஆபாசபடம் தலைமறைவான பாதிரியார் கைது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக முணுமுணுத்த விஷயம் தான் பாதிரியார் பெனடிக் பாலியல் விவகாரம். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் அமைந்துள்ள சர்ச்சில் ஒன்றில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தவர் தான் பெனடிக்.

தனது கட்டுப்பாட்டில் உள்ள தேவாலங்களில் பிராத்தனைக்காக வரும் அழகான பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் சில பெண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசியுள்ளார். இவரது மன்மத லீலைகளின் வீடியோ மற்றும் ஆடியோ கடந்த வாரம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பாதிரியார் பெனடிக் தலைமறைவான நிலையில், இந்த சம்பவம் குறித்து, அவரிடம் ஏமாந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, பாதிரியார் பெனடிக் சமந்தப்பட்ட தேவாலயத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் போலிசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இரண்டு தனி படைகள் அமைத்து தலைமறைவான பாதிரியாரை தேடிவந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் பால்பண்ணை அருகே பாதிரியார் பெனடிக் ஆன்ரோ இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அங்கு சென்ற போலிசார் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்ரோவை கையும் களவுமாக இன்று பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து, அவர் இது வரை செய்த லீலைகள் குறித்து போலிசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் மேலும் பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.