கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!
சினிமா திரைப்பட பாடலாசிரியர் மற்றும் திரைப்பட பத்திரிகையாளர் கவிஞர் நெல்லை பாரதி இன்று திடீரென உயிரிழந்தார். இன்று அவரது வீட்டில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நெல்லை பாரதியின் இறப்பு குறித்து நடிகர் விவேக் பதிவு செய்துள்ளார். அதில், நல்ல எழுத்து ஆளுமை கொண்ட நெல்லை பாரதியின் திடீர் இறப்பு வருத்தத்திற்குரியது. இது அவரே தேடிக்கொண்டது என்றும் தெரிந்தவர்கள் இதனை அறிவர் என்று கூறியுள்ளார்.
மற்றொரு நல்ல திறமையாளனை எழுத்து உலகமும், பத்திரிகை உலகமும் இழந்துவிட்டது மனதில் பட்டதை நேரடியாக சொல்பவர் சிலர் அந்த சிலரில் ஒருவர் இவர் என்றும் எப்போதாவது பூக்கும் அறிய மலர் என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் கலைஞர்களின் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இளம் நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன் இறப்பும் சினிமா திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கவிஞர் நெல்லை பாரதியின் இறப்பும் சினிமா நடிகர்கள் இடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.