பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!!

0
193
Circular to Deed Offices!! Document writers are not allowed to enter!!
Circular to Deed Offices!! Document writers are not allowed to enter!!

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!!

தமிழ்நாட்டில் மொத்தம் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் தற்போது எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு வந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு வந்துள்ளதை அடுத்து பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடுமையாக எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆவணம் எழுதுபவர்கள் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என்றும், பதிவுத் தலைவர் அழைத்தால் மட்டுமே வர வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த உத்தரவை சார்பதிவாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவை மீறி அலுவலகத்திற்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நடமாடியதையோ அல்லது செயல்பட்டதையோ பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைக் கண்காணிக்க சார்பதிவாளர்கள் தவறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் அமர்வதற்காக இருக்கும் இடங்களை ஆவணம் எழுதுபவர்கள் பயன்படுத்தக் கூடாது. மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் தங்களின் திடீர் ஆய்வுகளின் போது இந்த நடைமுறை சரியாக நடக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

இந்த சுற்றறிக்கையினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.இதைப் போலவே அனைத்து சார்பதிவாளர்களுக்கும் இது அறிவுறுத்தப்படுகிறது.

Previous articleசெயற்கை இறைச்சிக்கு அனுமதி!! விரைவில் மக்கள் மத்தியில் விற்பனை!!
Next articleசேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்!! இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வருகை!!