11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து

0
188
A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!
A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!

11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில் மற்றும் இவரது மனைவி சுஜாதா, இவர்களது மகள் சேலம் கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள இடங்களில் மற்றும் நண்பர்களின் வீட்டில் விசாரித்து தேடியுள்ளனர்.

விசாரித்ததில் அவர் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியை சேர்ந்த வாலிபரும் அவரும் காதலிப்பதாக தெரிய வந்துள்ளது. அவருடன் தான் சிறுமி மாயமானதும், தெரிய வந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர் . பின்னர் சுஜாதா அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பாட்டில் கலந்து கணவரும் தானும் அந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.

மயங்கி கிடந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு போதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் சுஜாதா உயிரிழந்தார், செந்திலுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான சிறுமி மற்றும் அவரது காதலன் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.பள்ளி மாணவி காதலனுடன் ஓடியதால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!
Next articleமாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு