மாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு 

மாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது.5 மணி நேரத்திக்கு மேலாக சோதனை நடைபெற்றதில் 10 என்ஐஏ அதிகாரிகள் அதிகாரிகள் ஏராளாமான ஆவணங்கள் மற்றும் பேக் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 3.45 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் பல மாவட்டங்களில் NIA அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் கடலூர் திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளவர்கள் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடலூரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதுவை பிடித்து சென்றுள்ளனர்.தேனி மாவட்டத்தில் பிஎஃப் இன் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அராபாத் என்பவரை பிடித்து சென்றுள்ளனர்.

புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமை அலுவலகம் மூக்காத்தால் தெருவில் உள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் 10 க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் அவர்களது நிர்வாகிகளும் உள்ளனர் . அவர்களிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டல தலைவர் பக்கரி அகமது தலைமையில் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் சிஆர்பிஎப் வீரர்களும் 20 க்கும் மேற்பட்டவர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருவதால் வேப்பேரி துணை ஆணையர் கோபி, உதவி ஆணையர் அரிகுமார் தலைமையில் பாதுகாப்பு அதிகரிக்கபட்டது. இதனையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது.

சுமார் 5 மணி நேரத்திக்கு மேலாக சோதனை நடைபெற்றது, இதில் 10 என்ஐஏ அதிகாரிகள் ஏராளாமான ஆவணங்கள், பேக் ஒன்றும் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் சென்னை மண்டல தலைவர் பக்கிரி அகமது கூறியதாவது

500 சதுர அடி அலுவலகத்தை  5 மணி நேரமாக 13 அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். மாட்டை வைத்தும், மதத்தை வைத்தும் மட்டும்தான் அரசியல் செய்கின்றார்கள்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ்  செய்யும் மக்கள் விரோத செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுடைய மன்றத்திலே நாங்கள் எடுத்துரைக்கிறோம். இதனால் பாப்புலர் ஃப்ரன்டை தொடர்ந்து குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகமது கூறியதாவது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  ஒரு ஜனநாயக அமைப்பு. இந்திய அளவில் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். குறிப்பாக பாஜக ,ஆர் எஸ் எஸ் அமைப்புகள் செய்யும் மக்கள் விரோத செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுடைய மன்றத்திலே நாங்கள் எடுத்துரைக்கிறோம்.இதனால் பாப்புலர் ஃப்ரன்டை தொடர்ந்து குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாட்டை வைத்து மதத்தை வைத்தும் மட்டும்தான் அரசியல் செய்கின்றார்கள். மக்களின் பொருளாதார வளர்ச்சி,கல்வி குறித்து எந்த அக்கறையையும் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் இந்திய அளவில் 8,000 க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மக்களுடைய உடல்களை மதத்திற்கு அப்பாற்பட்டு நாங்கள் நல்லடக்கம் செய்தோம்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இஸ்லாமிய அமைப்பு  என்பதை தாண்டி ஒட்டுமொத்த இந்திய அமைப்பாக உருமாறி இருக்கிறது. இது ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு கண்ணை உறுத்துகிறது.

நான்கு மாதங்களுக்கு முன்பாக தான் இங்கு சோதனை நடத்தினர் அப்பொழுதும் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. மீண்டும்  எங்கள் அலுவலகங்களில் சோதனையிடுகிறார்கள். இந்த சோதனைகளில் நிச்சயம் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை நாங்கள் மக்களுக்காக பாடுபடுகிறோம்.

தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அதிகாலை 3.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது
தேவையற்ற பதற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.

500 சதுர அடி அலுவலகத்தை  5 மணி நேரமாக 13 அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். எங்கள் அலுவலகத்தில் இருக்கும் பேப்பரையும், பிரிண்டரையும் மட்டும் தான் எடுத்துச் சென்றுள்ளனர்.இது போன்ற மிரட்டல்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றும் அடிபணியாது சட்டரீதியாக நாங்கள் இதனை எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.