9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!!
பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இணங்க தினமும் நிறையப் பெண்கள், குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதன் வகையில் தற்போது 15 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டிருப்பதை அடுத்து சிறை வார்டனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கரூரில் உள்ள சிக்களூர் என்ற பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் 9 –ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் தனது பெற்றோரிடம் தனக்கு வயிற்று வலி இருப்பதாக கூறி உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் அவரை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள் இதைப்பற்றி சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்கின்ற பார்த்திபன் சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறை வார்டனாக இவர் பணிபுரிகிறார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் லெனின்குமாரை கைது செய்யவில்லை.
எனவே அரசு மற்றும் சமூக அமைப்பினரிடையே சிறுமியின் குடும்பத்தினர் நீதி கோரினர். இதனையடுத்து அரசு மற்றும் சமூக அமைப்பினர் குற்றவாளியை கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் சிறை வார்டன் லெனின்குமார் என்ற பார்த்திபன் காவல் கண்காளிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். காவல் துறையினர் லெனின்குமார்-ஐ போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.