கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!!
நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் கருகியும், அழுக்கு படிந்தும் இருக்கும். சமைத்து முடித்ததும் அடுப்பை சுத்தம் செய்து போல் வாரத்திற்கு ஒருமுறை பர்னரை சுத்தம் செய்வது அவசியம். இவ்வாறு அடுப்பு மற்றும் பர்னரை தொடர்ந்து முறையாக பராமரித்து வந்தோம் என்றால் அவை புதிது போன்று இருக்கும்.
தேவையான் பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு – 5 தேக்கரண்டி
*ஈனோ பவுடர் – 1
*புளி – 1 எலுமிச்சம் பழ அளவு
*வினிகர் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து அதில் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து அழுக்கு படிந்துள்ள கேஸ் பர்னரை அதில் போட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
அடுத்து எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதன் சாற்றை ஒரு பவுலுக்கு பிழிந்து கொள்ளவும். அதில் 5 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து பர்னர் ஊறிக்கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் ஈனோ பவுடர் 1 பாக்கட் அளவு கொட்டி கலந்து விடவும்.
அடுத்து 2 தேக்கரண்டி அளவு வினிகர் சேர்த்து கலந்து விட்டு ஒரு நாள் முழுவதும் பர்னரை ஊற விடவும். பின்னர் சிறிதளவு புளியை பயன்படுத்தி பர்னரை தேய்த்து கழுவினால் போதும் பழைய அழுக்கு படிந்த பர்னர் புதிது போன்று பளிச்சிடும்.