பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

0
220
#image_title
பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 5ம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் 200 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா ஷர்மா, சித்தி  இட்னானி, யோஹிதா பிலானி, சோனியா பிலானி நடிப்பில் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் இந்தியாவில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. இருந்தும் உலக அளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வெறும் 9 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
இப்படம் வெளியான மே 5ம் தேதியில் இருந்து இன்று வரை 17 நாட்களில் 198.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இன்று அல்லது நாளை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டும் வாய்ப்பு உள்ளது.
Previous articleதளபதி 68 அப்டேட்!! மீண்டும் இணையும் லேடி சூப்பர்ஸ்டார்!!
Next articleநாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!