கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

 கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு!

கோவை மாவட்டம் உக்கடம்  ஜி எம் நகர் கோட்டைபுதுறை சேர்ந்தவர் அப்துல் காதர் (55). இவரது மனைவி ரபியா. மேலும் அப்துல் காதர் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். மேலும் இவர் நேற்று உக்கடம் வலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக அவரது மனைவி ரபியாவிற்கு தகவல் வந்தது.

மேலும் அந்த  தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று அவரது கணவரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் பேரில் விரைந்து வந்த போலீசார் குளத்தில் இருந்த அப்துல் காதர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இவர் குளக்கரையில் நடந்து வந்த பொழுது மயக்கம் ஏற்பட்டு தண்ணீருக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.