தேர்தல் நெருங்கி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.இதனை இன்றைய தினம் கன்னியாகுமரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய பரப்புரை மேற்கொண்டார். அப்போது இதுவரையில் இங்கே அதிமுக சார்பாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களோ அல்லது இங்கே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த பிஜேபியை சார்ந்த பொன் ராதாகிருஷ்ணன் அவர்களோ ஏதாவது செய்து இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேபோல நேற்றைய தினம் சென்னை ஆயிரம்விளக்கு சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் பிஜேபியை சேர்ந்த நடிகை குஷ்பு அவர்களை ஆதரிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேயராக இருந்தார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் மற்றும் துணை முதல்வர் என்ற பதவியில் இருந்தார். அப்படி எல்லா பதவிகளிலும் இருந்தும் அவரால் தமிழகத்திற்கு என்ன நல்லது நடந்தது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அப்போது நுங்கம்பாக்கம் பகுதியில் மேடை போட்டு உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் மேடையில் பெயரை தெரிவித்தவர்கள் கொளத்தூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் ஆதிராஜாராம் பெயரை தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆதிராஜாராம் ஆதரவாளர்களுக்கும் வளர்மதி அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.இதுதொடர்பான தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்ல அவர் உடனடியாக இருதரப்பினரையும் அழைத்து மிகக் கடுமையாக சாடியிருக்கிறார் இதனால் இருதரப்பினரும் சோகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.