முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

Photo of author

By Parthipan K

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவசாயி அம்மாள் (வயது 93) தமிழக முதல்வரின் தாயாரான இவர், நேற்று நள்ளிரவில் அவரது பூர்வீக இல்லத்தில் காலமானார்.

முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சேலம் லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தவசாயி அம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தந்தை கருப்ப கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், அவரது தாயார் காலமான தகவலை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாளின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இவரது உடல் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.