தோசை கல் துருப்பிடித்து விட்டதா? 5 நிமிடம் போதும் அருமையான மொறுமொறு தோசை ரெடி பண்ணிடலாம்

0
126

இன்றைய காலகட்டத்தில் யாரும் இரும்பு தோசை கல்லை பயன்படுத்துவது கிடையாது. காரணம் நான்ஸ்டிக் தவா வந்து விட்டது. அருமையாக தோசை நிமிடத்தில் சுட்டு விடலாம் என்று தானே!

என்றைக்காவது யோசித்தது உண்டா? இதுவரை எத்தனை தவாவை வாங்கி இருப்பீர்கள், எத்தனை தவாவை தூக்கி எறிந்து இருப்பீர்கள். ஆனால் இரும்பு தோசை கல் எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வருடம் ஆனாலும் சரி அப்படியே இருக்கும். இதில் தோசை, சப்பாத்தி,பரோட்டா, கொத்து கறி என எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

தவா கீறல் விழுந்தால் போதும் அது பயனற்றது. ஆனால் இரும்பு தோசை கல்லில் தோசை சுடும் போது நமக்கு நிறைய பலன்களை தருகிறது.

இனி துருப்பிடித்து இருந்தாலும் பரவாயில்லை எடுத்து பயன்படுத்துங்கள்.

அந்த துருவை எப்படி நீக்குவது என்று தெரியவில்லையா? இதோ அருமையான டிப்ஸ். துருப்பிடித்த கல்லை புதிதாக மாற்றி விடலாம்.

அதற்கு கடையில் போய் பொருள் வாங்க வேண்டும் என்பது அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சாதாரண பொருள் போதும்.

1. முதலில் இரும்பு தோசைக் கல்லை சோப் அல்லது சபீனா கொண்டு நன்றாக ஐந்திலிருந்து ஆறு முறை தேய்த்து கழுவ வேண்டும்.

2. இத்தனை முறை கழுவும் பொழுதே கொஞ்சம் துருப்பிடித்த கரை  போய்யிருக்கும்.

3. அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் தோசை கல்லை வைக்க வேண்டும்.

4. பின் சிறிதளவு மஞ்சள் தூள், சிறிது தூள் உப்பும் சேர்த்து நன்றாக தேய்த்து விடவும்.

5. பிறகு அதில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து தேய்க்க வெங்காயத்தை கொண்டு நன்றாக தேய்த்து விடவும். அதில் வெங்காயத்தை மேல்தோல் மற்றும் கீழ் தோல் சீவி விட்டு கத்தியில் குத்தி கொண்டு நன்றாக 5 நிமிடம் தேய்த்து விடவும்.

6. பின் இதை 5 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் கழுவி விடுங்கள்.

7. நீங்களே அசந்து போகும் அளவிற்கு ஒரு இடத்தில் கூட துருப்பிடித்த கரை எதும் இல்லாமல் எண்ணெய் பிசுக்கு கருமை இல்லாமல் புத்தம் புதிய தோசை கல் போல் ஆகிவிடும்.

8. நீங்கள் தோசை ஊற்றுவதற்கு முன்பு பாதி அளவு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக நறுக்கி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு அனைத்து இடங்களும் படும்படியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் கல் மொழுமொழுவென மாறிவிடும்.

இப்பொழுது தோசை சுட்டு பாருங்கள்! Hotel மாஸ்டர் தோற்று போகும் அளவிற்கு மொறுமொறு தோசை கிடைக்கும்.

author avatar
Kowsalya