கொரோனா நோய் தொற்று நிவாரண நிதி தாருங்கள் வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர் : மூன்றரை லட்சம் நிதி அளித்த முதல் குடிமகன்!

0
141

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த நோய் பரவலை தடுக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்தவும் பொது மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக அரசு பெரும் பொருட்செலவு செய்து வருகிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு நிதி வழங்கி இருந்தாலும் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்வதால் முதல்வர் பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது; கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் பாதுகாக்க நிவாரண நிதி அளியுங்கள். இவ்வாறு வழங்கப்படும் நிவாரண நிதிக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

நிவாரண நிதி வழங்க விரும்புவோர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் வழங்கலாம். இதனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய சேவை மூலமாகவும் வழங்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கலாம்.

மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமாக நிதி வழங்குபவர்களின் பெயர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் செய்தித்தாள்களின் விளம்பரங்களில் குறிப்பிடப்படும். நேரடியாக செலுத்த விரும்புவோர் தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்தலாம் என்று அதில் கூறியுள்ளார்.

இதனையடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளமான மூன்றரை கோடியை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்கியுள்ளார்.

Previous articleபோலீஸ் மீது எச்சில் துப்பிய காட்டுமிராண்டி பெண் : வீடியோவை பார்த்து கொந்தளித்த பாலிவுட் நடிகர்!
Next articleகுட்டியூண்டு டிரஸ் போட்டு வீட்டுக்குள்ளே கிரிக்கெட் விளையாடும் கத்ரீனா கைஃப் : கொரோனா பீதியில் இந்த குளுகுளு வீடியோவை பார்த்து ரிலாக்ஸ் ஆகுங்க!