பிரதமரின் தமிழக வருகை! உடன்பிறப்புகளுக்கு முக்கிய கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார், அதாவது புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். கிட்டத்தட்ட 11 மருத்துவ கல்லூரிகளை அவர் திறந்து வைக்க உள்ளார், தமிழ்நாட்டில் பத்து வருடங்கள் கழித்து திமுக ஆட்சியில் அமர்ந்து இருக்கின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் முதல் பயணம் இது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் சென்ற 10 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகத்திற்கு வருகை தந்தாலும் அதனை திமுக மிகக் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. திமுகவின் உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் கோ பேக் மோடி என்று டிரெண்ட் செய்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல கருப்பு பலூன்கள் பறக்க விடுவது, கருப்புக் கொடியை காட்டுவது, உள்ளிட்ட நிகழ்வுகளும் பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரும் சமயத்தில் தமிழகம் எங்கும் நடைபெறும். இதற்கு முக்கிய காரணமாக, இருப்பது திமுகவும், திமுகவின் உடன்பிறப்புகளும் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

கடந்த பத்து வருட காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தந்தால் அதற்கு காரணமே இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த திமுகவின் நிலை தற்போது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அதாவது பத்து வருட காலத்திற்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கின்ற திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருந்தாலும் பல்வேறு முக்கிய நிதிகளுக்காக மத்திய அரசையே நாட வேண்டிய தேவை இருக்கிறது.

அதோடு மத்திய அரசும் திமுக மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது, அதன் வெளிப்பாடாக மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி மற்றும் வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை தமிழகத்திற்கு வழங்காமல் போக்கு காட்டி வருகிறது மத்திய அரசு.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வரவிருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் உடன்பிறப்புகளுக்கு ஒரு சில கட்டளைகளை விதித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது தமிழக மக்கள் அமைதியாக இருந்தாலும் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இருக்கும் காரணத்தால், பிரதமர் வருகையின்போது உடன்பிறப்புகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில கட்டளைகளை பிறப்பித்து இருக்கிறார். அதாவது பிரதமர் வருகையின்போது கோபேக் மோடி என்ற ஹேஸ்டேக் உள்ளிட்டவற்றை சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்யக்கூடாது என்பது தான் அந்தக் கட்டளை என்று சொல்லப்படுகிறது.

வழக்கமாக மத்திய அரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது திமுக தான் ஆனால் தற்போது அந்த கட்சி ஆட்சியில் இருப்பதால் இவ்வாறான ஒரு முடிவை மேற்கொண்டிருக்கிறது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக பயணம் எவ்வாறு இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்திருக்கிறது. குறிப்பாக மத்திய அரசு எதிர்ப்பு என்ற ஒரே முழக்கத்தை திமுக விடாமல் பிடித்துக் கொண்டு இருப்பது தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த விட்டாலும் கூட இன்னமும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழக்கத்தை திமுக கைவிடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தற்போது பிரதமர் வருகையின்போது எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்திருந்தாலும் கூட அவர் உள்மனதில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் உடன்பிறப்புகளுக்கு வெளியிட்டிருக்கின்ற கட்டளையின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது எந்த மாதிரியான சூழல் இருக்கும் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

தமிழகம் ஏற்கனவே நிதிச்சுமையில் இருக்கிறது ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டிய திட்டங்கள் சிக்கலான நிலைக்கு வந்து விடக்கூடாது என்பது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், அதன் வெளிப்பாடுதான் இது போன்ற கட்டளை என்றும் விவாதித்து வருகிறார்கள்.

மத்திய அரசும், தமிழக அரசின் மனநிலையை நன்றாக அறிந்து வைத்திருக்கிறது என்று தெரிவிக்கும் அவர்கள், மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதுதான் இப்போதைக்கு சரி என்று பேசப்பட்டு வருவதாகவும், தகவல்கள் கிடைத்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது என்பது தற்போது முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டது என்பது மட்டும் நிச்சயமான உண்மை.