காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாயையும், குழந்தையையும் பத்திரமாக மீட்ட இளைஞர்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி பகுதியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இந்த நீர்வீழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கைக்குழந்தையுடன் ஒரு தாய் உட்பட நான்கு இளைஞர்கள் மறுமுனையில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.
இதில் அந்த இளைஞர்கள் தாங்கள் முதலில் நிறைய ஏறிச் செல்லாமல் அந்த குழந்தையையும், தாயையும், தங்களுடைய உயிரை பணயம் வைத்து மீட்டு எடுத்தார்கள். இந்த பணியின் போது இரண்டு இளைஞர்கள் பாறையின் மேல் இருந்து வழுக்கி விழுந்து விட்டார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்று அங்கு இருந்தவர்கள் கவலையுடனும், பதற்றத்துடனும், இருந்த சூழ்நிலையில், அந்த இளைஞர்கள் இருவரும் சிறிது தூரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் கரை ஒதுங்கினார்கள்.
இப்படி ஆபத்தான சூழ்நிலையிலும் கூட தைரியமாக செயல்பட்ட இளைஞர்களுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கும் பதிவு என்னவென்றால் தாயையும், சேயையும் காப்பாற்றி இருக்கும் அவர்களின் வீரம் மிக்க செயல் பாராட்டுக்கு உரியது. அரசால் அவர்கள் சிறப்பிக்கப் பெறுவார்கள் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பிறரது உயிரை காக்க துணிந்த அவர்களுடைய தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது பாராட்டியிருக்கிறார்.
பேரிடர் சமயத்தின் போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும், பண்புடையார் மற்றொன்று உலகம் என குறிப்பிட்டு இளைஞர்கள் தாயையும், குழந்தையையும், காப்பாற்றும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இளைஞர்கள் என்றால் பொறுப்பில்லாமல் சுற்றுபவர்கள் என்ற ஒரு கருத்து பொதுவாகவே இருந்து வருகிறது. ஆனால் நாங்கள் அப்படி அல்ல எங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்று பல இடங்களில் இளைஞர்கள் தங்களை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த விதத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகத்தின் அனைவருடைய கவனத்தையும் பெற்றிருக்கிறது.