அனைத்தும் சரியாக இருக்கிறது! விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி!

0
75

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது தன்னுடைய பார்வையை பதித்தது. அதாவது அவர்கள் செய்த ஊழல்கள், குற்றச்சாட்டுகள், என அனைத்தையும் கிளற தொடங்கியது திமுக தலைமையிலான அரசு.

அப்படி முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களிடம் இருந்துதான். முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடங்கியது விஜயபாஸ்கர் இடம் இருந்துதான் அப்போது அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள், என்று அனைவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இதில் பல கோடி ரூபாய் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் என்னிடமிருந்து எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கணக்கில் காட்டப்படாத பணம் என்று எதுவும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது வருமானத்திற்கு அதிகமாக எம் ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விஜயபாஸ்கருக்கு ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய சூழ்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஆலந்தூரில் இருக்கக்கூடிய லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேற்று முன் தினம் ஆஜரானார் 8 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் நேற்றைய தினம் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

விசாரணைக்குப் பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றும்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினேன் அவர்கள் நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை கொடுத்திருக்கின்றோம் அவர்கள் ஆவணங்கள் தொடர்பாக சந்தேகங்களை கேட்டறிந்து அவர்கள் அதற்குப் பின்னர் அதற்கு பதில் தெரிவித்து அதோடு இந்த வழக்கு குறித்த சம்மன் அனுப்பினார். மறுபடியும் அவராகவே தன்னிடம் கணக்கில் வராத பணம் எதுவும் இல்லை எல்லாவற்றிற்கும் தன்னிடம் கணக்கு உள்ளது என தெள்ளத்தெளிவாக கூறினார் விஜயபாஸ்கர்.