சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
191
CMC Medical College raging issue! Action order issued by the High Court!
CMC Medical College raging issue! Action order issued by the High Court!

சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்துள்ளது.மாணவர்கள் கல்லூரிகள் தேர்வு செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான  மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் கடந்த ஆறாம் தேதி கடிதம் ஒன்று கிடைத்தது அந்த கடிதத்தில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த கடிதத்தில் மருத்துவ படிப்பிற்கு புதிதாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.அதனைதொடர்ந்து மாணவர்களின் ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்தனர் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதம் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டது. மாணவர்களும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டோம் என்பதையும் அவரவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீதும் ,விடுதி வார்டன் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஏழு பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.மேலும் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட ஏழு மாணவர்கள் மீதும் ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து அவர்கள் ஏழு பெரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நேற்று ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.அந்த விசாரணையில் சிஎம்சி தளரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ராகிங் குறித்து புகார் வந்தவுடனே கல்லூரி முதல்வர் விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அந்த குழு அளித்த விளக்கத்தின் படி ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் ஏழு பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு எதிராக போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபணமானால் சட்டப்படி அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறினார்.மேலும் நீதிபதிகள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டு பிறகு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Previous article60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!
Next articleமத்திய அரசு: இனி இந்த இணையத்தில் அந்த வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்! தடை செய்யப்பட்ட செயலி மீண்டும் செயல்பட அனுமதி!