தேங்காய் – மாங்காய் துவையல் – சுவையாக செய்வது எப்படி?

0
82
#image_title

தேங்காய் – மாங்காய் துவையல் – சுவையாக செய்வது எப்படி?

நம் அனைவருக்கும் துவையல் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.துவையலில் பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் தேங்காய் – மாங்காய் துவையல்.இதை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மாங்காய் நறுக்கியது – 1 கப்

*தேங்காய் – 3/4 கப்(துருவியது)

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*சீரகம் – 1 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

*உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 5

*பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை:-

*பச்சை மாங்காய் ஒன்று எடுத்து சுத்தமாக கழுவி அதன் தொலை நீக்கி கொள்ளவும்.பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

*அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகள்,3/4 கப் தேங்காய் துருவல்,தேவையான அளவு உப்பு,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,2 தேக்கரண்டி மிளகாய் தூள்,சீரக தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

*பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு,சீரகம் மற்றும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் 5 வர மிளகாய்,கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள தேங்காய்- மாங்காய் துவையலில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த தேங்காய்- மாங்காய் துவையல் சாதம்,இட்லி,தோசை உள்ளிட்டவைகளுக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleஅனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் – சுவையாக செய்வது எப்படி?
Next article“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!!