கோவை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றமா? முழு தகவல் இதோ!
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகரில் 8 காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதன்படி மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜே சரவணன் சரவணம்பட்டி ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கணேஷ் குமார் பீளமேடு ஆய்வாளராகவும், தமிழரசு சாய்பாபா காலனி ஆய்வாளராகவும், கிருஷ்ண லீலா ரேஸ்கோர்ஸ் புலனாய்வு பிரிவு ஆய்வாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவில் பணியாற்றிய தெய்வமணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சுந்தரேசன் சைபர் கிரைம் ரீஜினல் லேப் ஆய்வாளராகவும் சதீஷ் குனியம் முத்தூர் ஆய்வாளராகவும் சுஜிதா உக்கடம் புலனாய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் தெரிவித்தார் .