தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

0
302
#image_title

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து பயன்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது.குறைந்த கட்டணம் நிறைவான சேவை என்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இந்த போக்குவரத்தை சிறப்பாக வழங்கும் டாப் 5 பேருந்து நிலையங்களின் தொகுப்பு இதோ.

1.கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னையில் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இது கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.இது தமிழக்தின் நம்பர் 01 இடத்தை பெற்றுள்ளது.மொத்தம் 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம்,ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பேருந்து நிலையமாக பார்க்கப்டுகிறது.180 பேருந்து நிறுத்துமிடங்கள் கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 500 பேருந்துகளும்,நாள் ஒன்றுக்கு 3000 பேருந்துகள் வரையும் இயக்கப்படுகிறது.தினமும் சுமார் 250,000 பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

2.ஈரோடு பேருந்து நிலையம்

மத்திய பேருந்து நிலையம் அல்லது வெள்ளிவிழா பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.மொத்தம் 13 அதாவது 120 நிறுத்தங்களை கொண்டுள்ளது.கடந்த 1973 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.இது தமிழக்தின் நம்பர் 02 பேருந்து நிலையமாக பார்க்கப்படுகிறது.நாள் ஒன்றிற்கு சுமார் 2600 புறநகர்ப் பேருந்து சேவைகளும்,1650 நகர்பேருந்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.தினமும் சுமார் 110,000 பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.அவ்வப்போது பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தமிழக அரசால் இயக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்னை,பெங்களூர்,கோயம்புத்தூர்,மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

3.மதுரை மாட்டுத்தாவணி

இவை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அல்லது எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 1999 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.இது தமிழக்தின் நம்பர் 03 பேருந்து நிலையமாக பார்க்கப்படுகிறது.இந்த பேருந்து நிலையம் சுமார் 10 கோடி செலவில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.8 நடைமேடைகள் அதாவது 96 வழித்தடங்களை கொண்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றிற்கு 70000 பயணிகள் வந்து செல்கின்றனர்.சென்னை,கோவை,ஈரோடு,திருநெல்வேலி என்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

4.சேலம் பேருந்து நிலையம்

இவை பழைய பேருந்து நிலையம் அல்லது மத்திய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2007 ஆம் ஆண்டு திறக்கபட்ட திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள இது தமிழக்தின் நம்பர் 04 பேருந்து நிலையமாக பார்க்கப்படுகிறது.பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள இது 6 நடைமேடைகள் மற்றும் 8 இருப்பு பாதைகளை கொண்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றிற்கு 75000 பயணிகள் வந்து செல்கின்றனர்.சென்னை,கோவை,ஈரோடு,திருநெல்வேலி,நாமக்கல் என்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

5.கோவை பேருந்து நிலையம்

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பேருந்து நிலையம் நஞ்சப்பா சாலை,காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ளது.கடந்த 1974 ஆம் ஆண்டு திறக்கபட்ட திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள இது தமிழக்தின் நம்பர் 05 பேருந்து நிலையமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள இது 4 நடைமேடைகளை கொண்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றிற்கு 70000 பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, நாமக்கல்,திருப்பூர்,கரூர் என்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Previous articleநடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!..
Next articleயூடியூபர் இயக்கும் நயன்தாரா அவர்களின் திரைப்படம்!!! இணையத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வைரல்!!!